சிபிஐ போலீஸ் இடையேயான போர் - தர்ணாவில் இறங்கிய மமதா பானர்ஜி!

பிப்ரவரி 04, 2019 336

கொல்கத்தா (04 பிப் 2019): கொல்கத்தாவில் போலீசுக்கும், சிபிஐக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதை அடுத்து மத்திய அரசை எதிர்த்து மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி தர்னாவில் ஈடுபட்டுள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்தில், மமதா பானர்ஜி உள்ளிட்டோர் மீது, குற்றச்சாட்டுக்கள் வைக்கப்படும் சாரதா சிட்பண்ட் மோசடி வழக்கை விசாரித்த சிறப்பு புலனாய்வு குழு தலைவராக பொறுப்பு வகித்த ராஜீவ் குமார், தற்போது கொல்கத்தா மாநகர போலீஸ் கமிஷனராக உள்ளார். ராஜீவ் குமாரிடம் விசாரணை நடத்துவதற்காக, கொல்கத்தாவில் உள்ள அவரது வீட்டிற்கு சிபிஐ அதிகாரிகள் குழு நேற்று சென்றிருந்தனர். அப்போது அவர்களை உள்ளே விடாமல், கொல்கத்தா போலீசார் தடுத்து நிறுத்தினர். அத்துடன் சிபிஐ அதிகாரிகளை, காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.

இவ்விவகாரம் நாடெங்கும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாநில அரசின் அனுமதி இல்லாமல் மாநிலத்தில் சிபிஐ உள்ளே நுழையக் கூடாது என்று மமதா பானர்ஜி ஏற்கனவே உத்தரவிட்டுள்ள நிலையில் சிபிஐ அத்துமீறல் நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் மேற்கு வங்க மாநிலம் முழுக்க திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சிபிஐக்கு எதிராக மமதா பானர்ஜி நடத்தி வரும் தர்ணாவால் தொண்டர்கள் ஆவேசம் அடைந்துள்ளனர்.

இது இப்படியிருக்க சிபிஐ இவ்விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தை நாடவுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...