மேற்கு வங்கத்தில் நுழைய யோகி ஆதித்யநாத்துக்கு தடை!

பிப்ரவரி 04, 2019 370

கொல்கத்தா (04 பிப் 2019): பாஜகவின் கூட்டம் ஒன்றில் கலந்து கொள்ள வந்த யோகி ஆதித்யநாத்தை மாநிலத்தில் அனுமதிக்க மமதா மறுப்பு தெரிவித்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாஜகவுக்கு எதிராக நாடு முழுவதும் அதிர்வலைகளை உருவாக்கி வருபவர்களில் முக்கியமானத் தலைவராக மமதா பானர்ஜி இருக்கிறார். ஆளும் பாஜக அரசை பாஸிஸ அரசாங்கம் எனவும் கடுமையாக விமர்சித்து வருகிறார்.

தேர்தலுக்கு முன்னர் மேற்கு வங்கத்தில் பாஜக வின் பலத்தை நிரூபிக்க 200 இடங்களில் கூட்டம் நடத்த பாஜக அரசு முயற்சித்து வருகிறது. இதில் பாஜக வின் முக்கிய நிர்வாகிகள் பலரும் கலந்துகொள்ள இருக்கின்றனர். அந்த வகையில் நேற்று வடக்கு தினஜ்பூரில் பாஜக வின் பேரணி நடக்க இருந்தது. அதில் கலந்துகொள்ள உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கலந்துகொள்ள தனி ஹெலிகாப்டர் மூலம் வர இருந்தார்.

ஆனால் ஹெலிபேட் பழுதுபார்த்தல் பணியைக் காரணம் காட்டி ஹெலிகாப்டர் தரையிரங்க முடியாது என மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்து விட்டது. இதனால் யோகி அந்த பேரணியில் தொலைபேசி மூலம் உரையாடினார். யோகிக்கு அனுமதி மறுக்கப்பட்ட இந்த விவகாரம் மேற்கு வங்கத்தில் அரசியல் பரபரப்பை உருவாக்கியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...