என் உயிரே போனாலும் விடமாட்டேன் - மத்திய அரசை அலற வைக்கும் மமதா பானர்ஜி!

பிப்ரவரி 04, 2019 353

கொல்கத்தா (04 பிப் 2019): என் உயிரே போனாலும் மத்திய அரசுடன் சமரசத்திற்கு இடமே இல்லை என்று மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்தில், முதலமைச்சர் மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் மீது, குற்றச்சாட்டுக்கள் வைக்கப்படும் சாரதா சிட்பண்ட் மோசடி வழக்கை விசாரித்தது சிறப்பு புலனாய்வு குழு. இந்த குழுவுக்கு தலைமை பொருப்பு ஏற்றிருந்தார் ராஜீவ் குமார். இவர், தற்போது கொல்கத்தா மாநகர காவல் ஆணையராக உள்ளார்.

இந்நிலையில் அவரிடம் விசாரணை நடத்தவதற்காக, கொல்கத்தாவில் உள்ள அவரது வீட்டிற்கு சிபிஐ அதிகாரிகள் குழு நேற்று சென்றிருந்தனர். அப்போது அவர்களை உள்ளே விடாமல், கொல்கத்தா போலீசார் தடுத்து நிறுத்தினர். அத்துடன் சிபிஐ அதிகாரிகளை, தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வலுக்கட்டாயமாக கொண்டு வந்த போலீசார், அவர்களை காவல்நிலையத்திற்கும் அழைத்துச் சென்றனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.

மேலும், இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள மம்தா பானர்ஜி, கொல்கத்தா காவல் ஆணையரான ராஜீவ் குமார் தான் உலகின் தலைசிறந்த போலீஸ் அதிகாரி. ராஜீவ் குமாரின் நேர்மை, தைரியம், அர்ப்பணிப்பு ஆகியவை கேள்விக்கிடமற்றவை , தற்போது அவர் விடுப்பில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

ராஜீவ் குமார் மீதான குற்றச்சாட்டு, பாஜக அரசின் உட்சபட்ச அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை என்றும் அவர் சாடியுள்ளார். காவல்துறையை கட்டுக்குள் கொண்டு வருவதற்காகவும், நாட்டின் அனைத்து அமைப்புகளையும் அழிக்கும் நோக்கிலும் பாஜக செயல்படுவதாகவும் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மம்தா, “பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்டோர் இந்த நாட்டை சீறழித்து வருகின்றனர். மாநில அரசின் அனுமதி இல்லாமல் சிபிஐ அதிகாரிகள் உள்ளே நுழைய தடை உள்ளபோது பிடி வாரண்டு கூட இல்லாமல் எப்படி கொல்கத்தா ஆணையர் வீட்டுக்கு வரலாம்? எனது மாநிலத்தின் காவல்த்துறையை எண்ணி பெருமைபபடுகிறேன். என் உயிரே போனாலும் சமரசம் என்ற சொல்லுக்கே இடமில்லை" என்று தெரிவிதார்.

இதற்கிடையே செவ்வாய் அன்று இவ்விவகாரம் தொடர்பாக சிபிஐ தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...