பாஜக அழைப்பை நிராகரித்தார் சூப்பர் ஸ்டார்!

பிப்ரவரி 05, 2019 378

திருவனந்தபுரம் (05 பிப் 2019): பிரபல மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால் பாஜகவில் இணைய மறுத்துவிட்டார்.

இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், "நான் பாஜகவில் இணையப் போவதாக செய்திகள் வெளியாகின்றன. அதில் உண்மை இல்லை. எனக்கு அரசியல் தெரியாது, எனவே நான் நடிகனாகவே இருக்க விரும்புகிறேன். பாஜகவில் இணையும் எண்ணம் எதுவும் இல்லை." என்று மோகன் லால் தெரிவித்தார்.

மோகன்லால் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடுவார் என்ற தகவலுக்கு இதன் மூலம் முற்றுப் புள்ளி வைத்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...