கோவா முதல்வர் மனோகர் பரிக்கர் உடல் நிலை பின்னடைவு!

பிப்ரவரி 05, 2019 292

புதுடெல்லி (05 பிப் 2019): கோவா முதலைமைச்சர் மனோகர் பாரிக்கரின் உடல் நிலையில் மேலும் பின்னடைவு ஏற்பட்டது. கடவுளின் கருணையால் அவர் வாழ்ந்து வருவதாக கோவா சட்டசபை துணை சபாநாயகர் மைக்கேல் லோபோ தெரிவித்துள்ளார்.

கோவா மாநிலத்தில் முதலைமைச்சர் மனோகர் பாரிக்கர் தலைமையில் பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. அந்த கூட்டணியில் கோவா பார்வர்டு கட்சி, மகாராஷ்டிராவாடி கோமந்தக் கட்சி மற்றும் மூன்று சுயேட்சைகள் முக்கிய அங்கம் வகித்து வருகிறார்கள்.

கடந்த ஆண்டு முதலைமைச்சர் மனோகர் பாரிக்கருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. மருத்துவ பரிசோதனையில் அவருக்கு மீள முடியாத நோய் பாதிப்பு ஏற்பட்டு இருப்பது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து மனோகர் பாரிக்கர் அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்று திரும்பினார்.

இடையிடையே உடல் நலக்குறைவு ஏற்பட்டபோதெல்லாம் அவர் டெல்லி, மும்பை, பனாஜியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். கடந்த வாரம் அவர் உடல் நலம் மேலும் பாதிக்கப்பட்டது. இதனால் மூக்கில் ‘டியூப்’ பொருத்தப்பட்ட நிலையில் அவர் கோவா சட்டசபைக்கு வந்து பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

இந்த நிலையில் கடந்த 31-ந்தேதி முதல்-மந்திரி மனோகர் பாரிக்கரின் உடல் நிலையில் மேலும் பாதிப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் டெல்லி அழைத்து செல்லப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் குழு தீவிர சிகிச்சை அளித்து வருகிறது. அவரை பா.ஜ.க. மூத்த தலைவர்கள் சிலர் சந்தித்து உடல் நலம் விசாரித்தனர்.

இதற்கிடையே செவ்வாய்கிழமை இரவு முதலைமைச்சர் மனோகர் பாரிக்கரின் உடல் நிலையில் மேலும் பின்னடைவு ஏற்பட்டது. அவரது உடல்நிலை சற்று மோசமாக இருப்பதாகவும், கடவுளின் கருணையால் அவர் வாழ்ந்து வருவதாகவும் கோவா சட்டசபை துணை சபாநாயகர் மைக்கேல் லோபோ தெரிவித்தார். இதனால் கோவா அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மனோகர் பாரிக்கர் பதவி விலகினாலோ அல்லது அவருக்கு ஏதாவது ஆகி விட்டோலோ கோவாவில் அரசியல் குழப்பம் ஏற்படும் என்று துணை சபாநாயகர் லோபோ கூறியுள்ளார். மனோகர் பாரிக்கர் பதவி விலகினால் புதிய முதல்-மந்திரியாக தங்கள் கட்சியை சேர்ந்த சுதீன் தவலிக்கரை தேர்வு செய்ய வேண்டும் என்று மகாராஷ்டிரா வாடி கோமந்தக் கட்சி கூறி வருகிறது.

செய்தியாளர்: சாகுல் ஹமீது

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...