பெண் கோட்சே பூஜா ஷகுன் முன்னணி பாஜக தலைவர்களை சந்தித்த பரபரப்பு புகைப்படங்கள்!

பிப்ரவரி 06, 2019 492

புதுடெல்லி (06 பிப் 2019): லேடி கோட்சே என அழைக்கப் படும் பூஜா ஷகுன் பாண்டே பாஜக தலைவர்களுடன் இருந்த புகைப்பட ஆதாரங்களை வெளியிட்டுள்ளார் என்டி டிவி மூத்த பத்திரிகையாளர் ரவிஷ் குமார்.

கடந்த வாரம் இந்து மஹா சபா தலைவர் பூஜா ஷகுன் பாண்டே மஹாத்மா காந்தியை சுட்டுக் கொலை செய்யும் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. நாட்டுக்கு எதிரான கோஷங்களும் அந்த வீடியோவில் பதிவானது. கோட்சேவுக்கு ஆதரவான குரல்கள் ஒலித்தன. ஆனால் இந்த சம்பவம் குறித்து இதுவரை மத்திய அரசோ அல்லது சம்பவம் நடந்த உத்திர பிரதேச அரசோ வாய் திறக்கவில்லை.

பூஜா ஷகுன் பாண்டே வுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப் பட்டிருந்தாலும் இதுவரை அவர் கைது செய்யப் படவில்லை. இது வெறும் கண்துடைப்பாகவே பொதுமக்கள் பார்க்கின்றனர்.

இந்நிலையில் என் டி டிவியின் மூத்த பத்திரிகையாளர் ரவிஷ் குமார், பூஜா ஷகுன் பாண்டே பாஜகவின் முக்கிய தலைவர்கள் சுஷில் மோடி, விஜேந்தர் குப்தா, உமாபாரதி, சிவராஜ் சிங் சவுஹான் உள்ளிட்டவர்களுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

மேலும் ஊடகங்கள் முத்தலாக் விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்துவதில்தான் முக்கியத்துவம் காட்டுகின்றன. ஆனால்  மிக முக்கியமாக நாட்டின் அச்சுறுத்தலான இந்த விவகாரம் குறித்து ஒரு ஊடகம் கூட விவாதம் நடத்தாதது வேதனை என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...