காந்தியின் உருவ படத்தை சுட்ட லேடி கோட்சே கைது செய்யப் பட்டார்!

பிப்ரவரி 06, 2019 462

அலிகார் (06 பிப் 2019): காந்தியின் உருவ படத்தை சுட்டு கோட்சேவுக்கு புகழாரம் சூட்டிய இந்து மகா சபா தலைவர் பூஜா பூஜா ஷகுன் பாண்டே கைது செய்யப் பட்டுள்ளார்.

உத்தரபிரதேசத்தில் கடந்த ஜனவரி 30ம் தேதி காந்தியின் நினைவு தினத்தினையொட்டி, அலிகார் பகுதியில் உள்ள தப்பாலுக்கு அருகே காந்தியை அவமதிக்கும் வகையில் , உருவப்படத்தை சுட்டும், அவரை கொலை செய்த கோட்சே படத்துக்கு மாலை அணிவித்தும் இந்து அமைப்புகள் கொண்டாடின.

இந்த செயலைக் கண்டித்து கடந்த பிப்ரவரி 4ம் தேதி நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தும்படி காங்கிரஸ் மேலிடம் உத்தரவிட்டது. அதன்படி பல்வேறு மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழகத்தில் வடசென்னையில் மாவட்ட தலைவர் எம்.எஸ்.திரவியம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் சிரஞ்சீவி, இளைஞர் காங்கிரஸ் செயலாளர் ரஞ்சித்குமார், டி.வி.துரைராஜ், சங்கர் என பலர் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். இதேபோன்று பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் காந்தியை கோட்சே சுட்டதை நினைவுப்படுத்துவதைப்போல துப்பாக்கியுடன் காந்தியின் உருவ படத்தை சுட்ட பெண் பூஜா ஷகுன் பாண்டே மற்றும் அவரது கணவர் அசோக் பாண்டே ஆகியோரை அலிகார் போலீசார் கைது செய்துள்ளனர்.

பூஜா ஷகுன் பாண்டேவுக்கு பல்வேறு பாஜக முன்னணி தலைவர்களுடன் தொடர்புள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...