தெஹ்ரீக்- உல்-முஜாகிதீன் அமைப்புக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவு!

பிப்ரவரி 06, 2019 296

புதுடெல்லி (06 பிப் 2019): காஷ்மீரில் உள்ள தெஹ்ரீக்- உல்-முஜாகிதீன் அமைப்பை பயங்கரவாத அமைப்பாக அறிவித்து மத்திய அரசு தடை விதித்துள்ளது.

தெஹ்ரீக்- உல்-முஜாகிதீன் காஷ்மீர் விடுதலைக்காக 1990-ம் ஆண்டு ஜூன் மாதம் யூனுஸ்கான் என்பவரால் இந்த அமைப்பு தொடங்கப்பட்டது. இந்த நிலையில் காஷ்மீரில் செயல்படும் தெஹ்ரீக்- உல்-முஜாகிதீன் அமைப்புக்கு மத்திய அரசு இன்று தடை விதித்து நடவடிக்கை எடுத்துள்ளது. பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவதால் அந்த அமைப்பு தடை செய்யப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள உத்தரவில் "காஷ்மீர் விடுதலைக்காக தொடங்கப்பட்ட தெஹ்ரீக்- உல்-முஜாகிதீன் அமைப்பு இந்தியாவின் பல பகுதிகளில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வருகிறது. அந்த அமைப்பின் உறுப்பினர்கள் வெளிநாடுகளில் இருந்து நிதி உதவி பெறுகிறார்கள். பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவதால் இந்த அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது." என்று தெரிவித்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...