130 முஸ்லிம் ஜோடிகளுக்கு நடந்த மெகா திருமணம்!

பிப்ரவரி 07, 2019 486

அஹமதாபாத் (07 பிப் 2019): குஜராத்தில் ஒரே மேடையில் 130 முஸ்லிம் ஜோடிகளுக்கு தொண்டு நிறுவனம் மூலம் திருமணம் நடைபெற்றது.

கடந்த பிப்ரவரி 2019 2 ஆம் தேதி நடைபெற்ற இந்த திருமணத்தை Gujarat Sarvjanik Welfare Trust (GSWT) ஏற்பாடு செய்திருந்தது.

இந்த திருமணம் குறித்து தெரிவித்த GSWT தலைவர் அஃப்சல் மேமோன், முஸ்லிம்களின் திருமண செலவை குறைக்கவும், ஆடம்பர திருமணங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கவும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இதுபோன்ற திருமணங்களை எங்கள் ட்ரஸ்ட் ஏற்பாடு செய்துள்ளது என்றார்.

மேலும் திருமண தம்பதிகளுக்கு தேவையான அனைத்துப் பொருட்கள் உடைகள் அலங்காரங்கள் அனைத்தையும் GSWT ஏற்பாடு செய்தது.

தேர்ந்த முஸ்லிம் மதகுருக்கள் 130 ஜோடிகளுக்கும் திருமணம் செய்து வைத்தனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...