இந்தியாவை ஆளுபவர் மோடியல்ல ஆர் எஸ் எஸ்: ராகுல் காந்தி தாக்கு!

பிப்ரவரி 07, 2019 308

புதுடெல்லி (07 பிப் 019): அனைத்து மதங்களையும் மதிக்கக் கற்றுக் கொள்ளுங்கள் என்று பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை வைத்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், " அரசியலமைப்புச் சட்டங்கள் ஒரு கட்சிக்கு சொந்தமானது அல்ல ஒட்டு மொத்த இந்தியர்களுக்கும் சொந்தமானது. இந்தியாவில் உள்ள அனைத்து மதங்களையும், மொழிகளையும் மதிக்க பிரதமர் கற்றுக் கொள்ள வேண்டும். ஒரு மதத்தை மட்டும் மதித்தால் அது இந்தியா போன்ற நாடுகளை ஆளும் அரசுக்கு உகந்ததல்ல.

மேலும் மோகன் பகவத் போன்ற ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள்தான் இந்தியாவை ஆள்கின்றனர். அதனால்தான் ஒரு மதத்திற்கு மட்டும் மரியாதை கொடுக்கப் படுகிறது. என்றும் ராகுல் காந்தி தெரிவித்தார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...