ஆதார் எண்ணால் வங்கியில் பணம் திருட்டு - அதிர்ச்சி அடைந்த கல்லூரி மாணவி!

பிப்ரவரி 09, 2019 452

புதுடெல்லி (09 பிப் 2019): ஆதார் எண்ணை வங்கியில் இணைத்ததன் விளைவு ரூ 15 ஆயிரத்தை இழந்துள்ளார் கல்லூரி மாணவி.

செப்டம்பர் 2018-ல் தான் வங்கி கணக்குகள், மொபைல் சேவைகள் போன்ற சில சேவைகளுக்கு ஆதார் கட்டாயம் இல்லை எனத் தெளிவாக சுட்டிக் காட்டியது உச்ச நீதிமன்றம். ஆனால் இங்கு இன்னும் ஆதார் கார்டை இணைத்துக் கொள்வது தான் எதிர் கால வங்கிச் சேவைகளுக்கு நல்லது என பேசி ஒப்புக் கொள்ள வைக்கிறார்கள் வங்கி அதிகாரிகள். சேவை வேகத்தைப் பொறுத்தவர அவர்கள் சொல்வது உண்மை தான். ஒரு சில நிமிடங்களில் வங்கி வேலைகள் முடிந்துவிடும். ஆனால் இங்கு ஒரு கல்லூரி மாணவியின் வங்கிக் கணக்கை ஆதார் எண்களோடு இணைக்கச் சொல்லி 15,000 ரூபாயை திருடி இருக்கிறார்கள்.

சில வாரங்களுக்கு முன் தில்லியைச் சேர்ந்த ப்ரீத் கவுர் (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது) என்கிற பெண்ணுக்கு சுமார் இரவு எட்டு மணிக்கு போனில் ஒரு அழைப்பு வந்திருக்கிறது. அழைப்பில் பேசியவர் "கவுர் உங்களின் வங்கிக்கணக்கோடு ஆதார் விவரங்கள் இணைக்கப்படாததால் சில சேவைகள் முடங்கி இருக்கின்றன. முழு வங்கிச் சேவையையும் பெற உங்கள் டெபிட் கார்ட் விவரங்கள், ஆதார் விவரங்களைக் கொடுக்கவும்" எனக் கேட்டிருக்கிறார்கள்.

கவுரும் வங்கிச் சேவைகளை முழுமையாகப் பெறுவோம் என்கிற எண்ணத்தில் அவர்கள் கேட்ட விவரங்களைக் கொடுத்திருக்கிறார்கள். அதோடு துணிச்சலாக வாடிக்கையாளருக்கு வரும் ஓடிபியையும் சாமர்த்தியமாக வாடிக்கையாளர் சேவை அதிகாரி பேசுவது போல் பேசி வாங்கி இருக்கிறார்கள்.

கொஞ்ச நேரத்துக்குப் பின் ஆதார் விவரங்களோடு இணைக்கச் சொன்ன வங்கிக் கணக்கில் இருந்து 15,000 ரூபாய் (இருந்த மொத்த தொகை) அப்படியே டெபிட் ஆகி இருக்கிறது. அப்போது தான் தில்லி பல்கலைக்கழகத்தில் படிக்கும் கவுருக்கு தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறாள்.

கவுரிடம் பேசியவர்கள் சில டெக்னாலஜிகளை பயன்படுத்தி தாங்கள் பேச பயன்படுத்திய இடத்தை டிராக் செய்யாத ரீதியில் திட்டமிட்டு கவுரிடம் இருந்து திருடி இருக்கிறார்கள். இதற்கு நடுவில் தவறான காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததாகவும், ஒரு பிரச்னை எழ, சம்பந்தப்பட்ட காவல் நிலையத்துக்கு இப்போது தான் வழக்கை மாற்றி இருக்கிறார்களாம். சைபர் செல்லும் விசாரித்து வருகிறதாம்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...