பாஜக எம்.எல்.ஏ மிரட்டல் பேச்சு!

பிப்ரவரி 09, 2019 347

ஐதராபாத் (09 பிப் 2019): பாரத் மாதா கி ஜே சொல்லாவிட்டால் பாரதத்தில் இருக்க முடியாது என்று பாஜக எம்எல்ஏ ராஜாசிங் மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியுள்ளார்.

மகாராஷ்டிர மாநிலத்தின் தென் மேற்கு நகரமான சோலாப்பூரில் இந்து ராஸ்டிரா சம்மேளனம் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய தெலுங்கானா பாஜக எம்எல்ஏ ராஜாசிங் இந்து மத உணர்வுகளை எதிர்ப்பவர்கள் இந்தியாவில் இருக்க முடியாது என்று எச்சரித்தார்.

மேலும் பாரத மாதா கி ஜே மற்றும் வழிபாட்டுக்குரிய கோமாதாவை மதிக்காதவர்கள் யாரும் பாரதத்தில் இருக்க முடியாது என்று மிரட்டல் விடுக்கும் வகையில் பேசினார். இந்தியா என்பது இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள நாடு என்பதால் இந்தியர்கள் என்று தங்களை அடையாளப்படுத்த விரும்புபவர்கள் அனைவரும் இந்தியர்களின் உணர்வுகளை மதிக்க வேண்டும் என்றார். அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானத்தை எதிர்ப்பவர்கள் நாட்டின் சொந்த வேர்களை மறுக்கிறார்கள் என்றவர் சத்ரபதி சிவாஜி போல் நாட்டிலுள்ள இளைஞர்களும் அடித்து நொறுக்க தயாராக இருக்க வேண்டும் என்று கூறினார்.

ஏற்கனவே பாஜக ஆட்சிக்கு வந்தால் ஐதராபாத் மீண்டும் பாக்யநகர் என மாற்றப்படும் . செகந்திரபாத் மற்றும் கரீம்நகர் ஆகியவற்றின் பெயர்களும் மாற்றப்படும். என்று அவர் தெரிவிட்த்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...