மூன்று லட்சம் கொடுத்தால் போலி மருத்துவ சான்றிதழ் - அதிர்ச்சித் தகவல்!

பிப்ரவரி 09, 2019 322

மும்பை (09 பிப் 2019): போலி சான்றிதழ் சமர்ப்பித்த 57 டாக்டர்களின் உரிமம் ரத்து செய்யப் பட்டுள்ளது.

மஹாராஷ்டிரா மருத்துவ கவுன்சில், இதுகுறித்து போலீசில் புகார் அளித்துள்ளது. போலி சான்றிதழ் சமர்ப்பித்த போலி மருத்துவர்கள் அனைவரும் 2014 - 15 ஆண்டில் படித்தது போன்ற சான்றிதழ்களை மஹாராஷ்டிரா மருத்துவ கவுன்சிலில் சமர்ப்பித்துள்ளனர். இது தொடர்பாக முன்னாள் மருத்துவ மாணவர் கைது செய்யப் பட்டுள்ளார்.

போலி மருத்துவ சான்றிதழ் பெறுவதற்காக டாக்டர் ஸ்னேஹல் நியாத்தி என்பவர் ரூ 3 முதல் 5 லட்சம் வரை பெற்றதாக குற்றம் சாட்டப் பட்டுள்ளது.

இந்நிலையில் மேலும் பல மாணவர்கள் இவரிடம் பணம் கொடுத்து போலி சான்றிதழ் பெற்றிருக்கக் கூடும் என அஞ்சப் படுகிறது. இதுகுறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...