பிரவீன் தொகாடியா புதிய கட்சி தொடங்கினார்!

பிப்ரவரி 09, 2019 309

புதுடெல்லி (09 பிப் 2019): முன்னாள் விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர் பிரவீன் தொகாடியா இந்துஸ்தான் நிர்மாண் தளம் என்ற புதிய கட்சியை தொடங்கினார்.

பிரவீன் தொகாடியா. அயோத்தியில் ராமர் கோவிலை கட்டியே தீரவேண்டும் என பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசுக்கு கடும் நெருக்கடி கொடுத்து வந்தவர். இந்நிலையில், பிரவீன் தொகாடியா புதிய அரசியல் கட்சியை இன்று தலைநகர் டெல்லியில் தொடங்கினார். தலைநகர் டெல்லியில் உள்ள இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற விழாவில் தொகாடியா இந்துஸ்தான் நிர்மாண் தளம் என்ற புதிய அரசியல் கட்சியை அறிவித்தார்.

மேலும், வரும் பொது தேர்தலில் உத்தரப்பிரதேசம் மற்றும் குஜராத் மாநிலத்தின் அனைத்து மக்களவை தொகுதிகளிலும் போட்டியிடும் என தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பிரவீன் தொகாடியா கூறுகையில், உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் அயோத்தியா தொகுதியில் போட்டியிட உள்ளேன். பொய்யான வாக்குறுதிகளை அளிக்கப் போவதில்லை. நம்பகத்தன்மையுடன் செயல்படுவோம் என தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...