முசாபர் நகர் கலவரம் தொடர்பான வழக்கில் ஏழு பேருக்கு ஆயுள் தண்டனை!

பிப்ரவரி 09, 2019 417

லக்னோ (09 பிப் 2019): முசாபர்நகரில் நடைபெற்ற கலவரம் தொடர்பான வழக்கில் 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து முசாபர் நகர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் உத்தரபிரதேம் முசாபர் நகர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள இரு பிரிவினருக்கு இடையே கலவரம் ஏற்பட்டது. ஆகஸ்ட் 27ம் தேதி கவால் கிராமத்தில் சச்சின், கவுரவ் ஆகிய இளைஞர்கள் கொல்லப்பட்டதால் கலவரம் மூண்டது.

அந்த கலவரத்தில் 62 பேர் உயிரிழந்தனர். 93 பேர் காயமடைந்தனர். 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வேறு இடத்திற்கு சென்று குடியேறினர். கலவரம் தொடர்பாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

அந்த வழக்கை சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரித்து வந்த, நிலையில் கவால் கிராமத்தைச் சேர்ந்த சச்சின் மற்றும் கவ்ரவ் ஆகிய இளைஞர்கள் கொல்லப் பட்டது தொடர்பான வழக்கு விசாரணை முசாபர் நகர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முஜாமில், முஜாசிம், ஃபர்கான், நதீம், ஜனங்கிர், அப்சல் மற்றும் இக்பால் ஆகிய 7 பேர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணமாகின.

இதையடுத்து அவர்கள் 7 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து முசாபர் நகர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக இந்த கலவரத்தில் தொடர்புடைய பாஜக மற்றும் இந்துத்வாவினர் பலரை யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு விடுவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...