கள்ளச் சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 70 ஆக உயர்வு!

பிப்ரவரி 09, 2019 375

பாலுப்பூர் (09 பிப் 2019): உத்தரகாண்டில் கள்ளச்சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 70 ஆக உயர்ந்துள்ளது.

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவார் மாவட்டம் ரூர்கி பகுதியைச் சேர்ந்த ஒருவர் இறந்த 13ம் நாள் துக்கத் தினம், கடந்த 7ம் தேதி அனுசரிக்கப்பட்டது. அப்போது, இறந்த நபரின் உறவினர்கள் உத்தரபிரதேச மாநிலம் சகாரான்பூர், உத்தரகாண்ட் மாநிலம் பாலுப்பூர் பகுதிகளில் இருந்து ரூர்கி கிராமத்திற்கு சென்றனர். அதேபோல், நான்கல் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த உறவினர்களும், துக்க நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இவர்களுக்கு, அன்றிரவு விருந்து வழங்கப்பட்டது. ெதாடர்ந்து, ‘ஹூச்’ எனக்கூறப்படும் தடை செய்யப்பட்ட கள்ளச்சாரயத்தை சிலர் அருந்தியுள்ளனர்.

இந்த சாராயத்தை குடித்த சில மணி நேரங்களில் 50க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்தனர். அவர்களை மீட்ட உறவினர்கள், உத்தரபிரதேச மாநிலம் சகாரான்பூர், பாலுப்பூர் உள்ளிட்ட மாவட்ட அரசு மருத்துவமனைகளில் அனுமதித்தனர். ஆனால், பலரின் நிலை கவலைக்கிடமாக இருந்தது. ெதாடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், கடந்த 7ம் தேதி முதல் நேற்றிரவு வரை படிப்படியாக 70 பேர் உயிரிழந்தனர்.

இவ்விவகாரம் தொடர்பாக உத்தரபிரதேச போலீசார் தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், பெரும் சோகத்தை ஏற்படுத்திய ரூர்கி கள்ளச்சாரயம் சம்பவம் குறித்து, உத்தரகாண்ட் போலீஸ் உயரதிகாரிகள் மற்றும் மாவட்ட கலெக்டர் தனித்தனியாக சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...