திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ சுட்டுக் கொலை - பாஜக மீது சந்தேகம்!

பிப்ரவரி 10, 2019 370

கொல்கத்தா (10 பிப் 2019): மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ சத்யஜித் பிஸ்வாஸ் மர்ம நபர்களால் சுட்டுக் கொலை செய்யப் பட்டுள்ளார்.

மேற்கு வங்கம் நாடியா மாவட்டம் கிருஷ்ணகஞ்ச் தொகுதியின் திரிணாமுல் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் சத்யஜித் பிஸ்வாஸ், அந்த பகுதியில் நடந்த சரஸ்வதி பூஜை விழாவினை துவங்கி வைப்பதற்காக வந்த சமயத்தில் மர்மநபர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த கொலை சம்பவத்தின் போது, நாடியா மாவட்டம் கிருஷ்ணகஞ்ச் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் சத்யஜித் பிஸ்வாஸ், ஒரு சிறு கூட்டத்தினர் முன்பு நாற்காலியில் அமிர்திருந்த சமயத்தில் அவர் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார் என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

பாஜக தலைவர் முகுல் ராய் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தான் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டிருக்க வேண்டும் என நாதியா மாவட்ட திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் கெளரிசங்கர் தத்தா குற்றம்ச்சாட்டியுள்ளார்.

இதற்கிடையே இருவரை இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் கைது செய்துள்ளனர். ஆனால் அவர்கள் யார் என்பது குறித்து தகவல் வெளியாகவில்லை.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...