காஷ்மீரில் பாதுகாப்புப் படையினரால் ஐந்து பேர் சுட்டுக் கொலை!

பிப்ரவரி 10, 2019 260

ஜம்மு (10 பிப் 2019): காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஐந்து பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

கல்கம் இன் கெல்லம் தேவ்சார் பகுதியில் இன்றைய தினம் இந்த மோதல் ஏற்பட்டது. காஷ்மீர் மாநிலம் குல்கம் மாவட்டத்தில் உள்ள சிர்னூ கிராமத்தில் தீவிரவாதிகள் சிலர் பதுங்கியிருப்பதாக உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் பாதுகாப்பு படையினர் அப்பகுதியை தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், அவர்கள் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்த ஆயத்தமாகி வருவதாகவும் விசாரணையில் தெரியவந்தது. இதனை அடுத்து, மாநில போலீசாருடன் இணைந்து பாதுகாப்பு படையினர்கல்கம் இன் கெல்லம் தேவ்சார் பகுதியை சுற்றி வளைத்தனர்.

இருவருக்கும் இடையே பல மணி நேரம் நீடித்த துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது இதில் 5 பேர் கொல்லப்பட்டனர். மேலும் சிலர் அங்கு பதுங்கி இருக்கின்றார்களா என தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...