பிரியங்கா காந்தியின் உடையை விமர்சித்த பாஜக எம்.பியை வறுத்தெடுத்த மெஹபூபா முஃப்தி!

பிப்ரவரி 11, 2019 351

புதுடெல்லி (11 பிப் 2019): பிரியங்கா காந்தியை தரக்குறைவாக விமர்சித்த பாஜக எம்பி ஹரீஷ் திவேதியை காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹபூபா முஃப்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.

பாஜக எம்பி ஹரீஷ் திவேதி பிரியங்கா காந்தி ஜீன்ஸ் அனிவது குறித்து விமர்சித்திருந்தார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள மெஹபூபா முஃப்தி, " உடையை தேர்ந்தெடுப்பது அவரவர் விருப்பம், பெண்களை தரக்குறைவாக விமர்சிப்பது தொடர் கதையாகி வருகிறது. பெண்களின் உடையை விமர்சிப்பது உங்கள் வேலையல்ல" என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

பிரியங்கா உத்திர பிரதேச காங்கிரஸ் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப் பட்டது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...