ரஃபேல் ஊழல் விவகாரத்தில் பிரதமர் மோடி மீது கிரிமினல் வழக்கு: ராகுல் காந்தி!

பிப்ரவரி 12, 2019 438

புதுடெல்லி (12 பிப் 2019): ரஃபேல் ஊழல் விவகாரத்தில் பிரதமர் மோடி மீது கிரிமினல் வழக்கு தொடர வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய நாடான, பிரான்ஸில் உள்ள ‘டசால்ட்’ நிறுவனத்திடம் இருந்து அதிநவீன ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த கொள்முதல் ஒப்பந்தத்தில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்திருப்பதாக காங்கிரஸ் கட்சியினர் குற்றம்சாட்டினர்.

இந்த குற்றச்சாட்டை மத்திய அரசு மறுத்த வந்த நிலையில், வழக்கறிஞர் எம்.எல்.சர்மா ரபேல் விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

பிரதமர் மோடி ரபோல் போர் விமான ஒப்பந்தத்தில் பங்கேற்றுள்ளார் என ராகுல் காந்தி குற்றம் சாட்டி வருகிறார்.

இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது...

ரபேல் ஒப்பந்த விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி ஒரு இடைத்தரகர் போல் செயல்பட்டு உள்ளார். அனில் அம்பானி நிறுவனம் பல கோடி ரூபாய் மதிப்புள்ள போர் ஜெட் ஒப்பந்தத்தை பெற உதவுவதற்காக அனில் அம்பானியின் இடைத்தரகராக பிரதமர் மோடி செயல்பட்டுள்ளார். ஒப்பந்தம் இறுதியாகும் 10 நாட்கள் முன் பிரஞ்சு பாதுகாப்பு அமைச்சரை அனில் அம்பானி சந்தித்துள்ளார்.

பாதுகாப்பு அமைச்சக நடவடிக்கைகளை பிரதமர் அலுவலகம் உளவு பார்த்து உள்ளது. ரபேல் ஒப்பந்தத்தில் பிரதமர் மோடி ரகசிய விதிமுறைகளை மீறிய்ள்ளார். அவருக்கு எதிராக கிரிமினல் வழக்கு தொடர வேண்டும் என கடுமையாக சாடினார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...