சிறுமி வன்புணர்வு - இமாமுக்கு எதிராக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு!

பிப்ரவரி 12, 2019 558

திருவனந்தபுரம் (12 பிப் 2019): கேரளாவில் சிறுமி வன்புணர்வு செய்யப் பட்டது தொடர்பாக இமாம் ஒருவர் மீது போக்சோ சட்டம் பாய்ந்துள்ளது.

ஷபீக் அல் காசிமி என்ற பெயர் கொண்ட இமாம், 15 வயது சிறுமியை காட்டுக்குள் கடத்தி சென்று வன்புணர்ந்ததாக கூறப்படுகிறது.

இன்னோவா காரில் சிறுமியை கடத்திச் சென்று காட்டுக்குள் வைத்து இமாம் வன்புணர்ந்துள்ளார். அவரை கையும் களவுமாக சிலர் பிடித்துள்ளனர். இதனை அடுத்து அவர் மீது போக்சோ சட்டம் பாய்ந்துள்ளது..

இமாம் ஒருவர் சிறுமியை வன்புணந்த விவகாரம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...