அவதூறு பரப்பிய வாட்ஸ் அப் அட்மின்கள் கைது!

பிப்ரவரி 13, 2019 614

திருவனந்தபுரம் (13 பிப் 2019): புதுமண தம்பதிகள் குறித்து அவதூறு செய்தி பரப்பிய 11 வாட்ஸ் அப் அட்மின்கள் கைது செய்யப் பட்டுள்ளனர்.

கேரளாவின் கண்ணூர் அருகே உள்ள கண்டபுரத்தை சேர்ந்தவர் அனூப் (29). பஞ்சாப் விமான நிலையத்தில் இன்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ஜூபி (27). வளைகுடா நாடுகல் ஒன்றான சார்ஜாவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இருவரும் ஒன்றாக படித்தபோது ஒருவரையொருவர் காதலித்தனர்.

இதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமண புகைப்படங்கள் வாட்ஸ் அப் உள்பட சமூக வலைதளங்களில் வெளியானது. அதில், ₹15 கோடி சொத்துக்காக 48 வயது பெண்ணை 25 வயது வாலிபர் திருமணம் செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.இது வலைதளங்களில் வைரலாக பரவியது. இதனால் இருவரும் வேதனையடைந்தனர். இதுபற்றி நடவடிக்கை எடுக்கக்கோரி போலீசில் புகார் அளித்தனர்.போலீசார் விசாரணை நடத்தி வாட்ஸ் அப்பில் இந்த தகவலை பரப்பிய 11 குரூப் அட்மின்களை கைது செய்தனர். இதுபோல் மேலும் ஏராளமான வாட்ஸ் அப் குரூப்களுக்கு இந்த தகவல் பரவி உள்ளதால் கைது எண்ணிக்கை அதிகரிக்கும் என கண்ணூர் போலீசார் தெரிவித்துள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...