70 வயது முதியவருக்கு 28 வயது பெண்ணுடன் திருமணம் - முதலிரவில் நடந்த விபரீதம்!

பிப்ரவரி 13, 2019 568

சண்டீகர் (13 பிப் 2019): பஞ்சாபில் 70 வயது முஹம்மது முஸ்தபா என்ற முதியவருக்கு 28 வயது நஜ்மா என்ற இளம் பெண்ணுடன் இரண்டாவது திருமணம் நடந்தது.

இந்நிலையில் திருமணம் முடிந்து முதலிரவிற்கான ஏற்பாடுகள் நடைபெற்றது. முதலிரவின்போது முஹம்மது முஸ்தபா மனைவி நஜ்மாவிற்கு முதல் மனைவியின் நகைகளை கொடுத்துள்ளார். அப்போது நஜ்மா முஸ்தப்பாவிற்கு மயக்க மருந்து கலந்த பாலை கொடுத்துள்ளார். இதனை குடித்த அவர் மயங்கினார்.

அடுத்த நாள் காலையில் எழுந்த முஸ்தப்பாவிற்கு பேரதிர்ச்சி, வீட்டில் இருந்த பணம், நகை மற்றும் ஆடம்பரப்பொருட்களை நஜ்மா முழுவதுமாக திருடிக்கொண்டு தப்பித்துள்ளார். அதிர்ச்சியடைந்த முஸ்தப்பா இதுகுறித்து காவல் நிலையடத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் போலீஸார் அந்த பெண்ணை தேடி வருகின்றனர். இதே போல் பல பகுதிகளில் இளம் பெண்கள் முதியவர்களை குறிபார்த்து மோசடி செய்வதாக புகார் எழுந்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...