மத போதகர் வன்புணர்ந்ததை உறுதி படுத்திய சிறுமி - ஷஃபீக் அல் காசிமி விரைவில் கைது!

பிப்ரவரி 14, 2019 440

திருவனந்தபுரம் (14 பிப் 2019): கேரளாவில் மத பிரச்சாரகர் ஷஃபீக் அல் காசிமி சிறுமியை வன்புணந்த வழக்கில் சிறுமியிடம் போலீசார் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

ஷபீக் அல் காசிமி என்ற இமாம், 15 வயது சிறுமியை காட்டுக்குள் கடத்திச் சென்று வன்புணர்நததாக குற்றம் சாட்டப் பட்டது. இதனை அடுத்து ஷஃபீக் காசிமி மீது போக்சோ சட்டம் பாய்ந்தது. இன்னோவா காரில் சிறுமியை கடத்திச் சென்று காட்டுக்குள் வைத்து இமாம் வன்புணர்ந்துள்ளார். அவரை கையும் களவுமாக சிலர் பிடித்துள்ளனர்.

இந்நிலையில் சிறுமியிடம் போலீசார் நடத்திய ரகசிய வாக்குமூலத்தில் இமாம் தன்னை வன்புணர்ந்ததை சிறுமி உறுதி படுத்தியுள்ளார்.

இதனை அடுத்து ஷஃபீக் அல் காசிமி விரைவில் கைது செய்யப்படுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...