ராகுல் காந்திக்கு முத்தம் கொடுத்த பெண் - வைரலாகும் வீடியோ!

பிப்ரவரி 15, 2019 335

வல்சாத் (15 பிப் 2019): குஜராத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு பெண் ஒருவர் முத்தம் கொடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பிரதமர் மோடியின் கோட்டை என கருதப்படும் குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தவும், தேர்தலில் அதிக தொகுதிகளை கைப்பற்றவும் ராகுல் காந்தி திட்டமிட்டு செயல்பட்டு வருகிறார்.

இந்தநிலையில், குஜராத் மாநிலம் வல்சாத் மாவட்டம், லால்டுங்ரி பகுதியில் காங்கிரஸ் பொதுக்கூட்டம் நேற்று பிற்பகலில் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் கலந்து கொண்டு உரையாற்றினார்.

அப்போது காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பெண் தொண்டர்கள் 5 பேர் ராகுல்காந்திக்கு மலர்மாலை அணிவித்தனர். கூட்டத்தில் இருந்த பெண் ஒருவர் ராகுல்காந்தியின் கன்னத்தில் திடீரென முத்தம் கொடுத்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ராகுல் காந்தி மீது பற்று கொண்ட பலர் ராகுல் காந்தியை அன்போடு முத்தம் கொடுத்து ஆதரிப்பது ஏற்கனவே அஸ்ஸாமிலும் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...