அமைதியாக இருக்க விரும்புகிறேன் - ராகுல் காந்தி அறிவிப்பு!

பிப்ரவரி 15, 2019 397

புதுடெல்லி (15 பிப் 2019): காஷ்மீரில் நேற்று நடைபெற்ற தாக்குதல் காரணமாக அடுத்து வரும் இரண்டு நாட்களுக்கு அரசியல் குறித்து பேசாமல் இருக்க விரும்புகிறேன் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி “ நான் இந்த நெருக்கடியான நேரத்தில் அரசு மற்றும் பாதுகாப்பு வீரர்களுக்கு துணை நிற்க விரும்புகிறேன். இந்த தருணத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வெறு எந்த அரசியல் சர்ச்சைகள் குறித்தும் நான் பேசப்போவதில்லை.

அரசியல் குறித்து நான் மட்டுமல்ல காங்கிரஸ் கட்சியின் மற்ற தலைவர்களும், எதிர் கட்சிகளும் அமைதியாக இருப்பதே நல்லது. ராணுவ வீரர்களுக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டிய நேரம் இது." என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...