காஷ்மீரில் உயிரிழந்த ராணுவ வீரரின் உடலை தோளில் சுமந்த ராஜ்நாத் சிங்!

பிப்ரவரி 15, 2019 414

ஜம்மு (15 பிப் 2019): காஷ்மீர் புல்வாமாவில் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரரின் உடலை தோளில் சுமந்து சென்று நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.

ஜம்மு காஷ்மீரில், நேற்று நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில், சிஆர்பிஎஃப் வீரர்கள் 40க்கும் மேற்பட்டவர்கள் பலியாகினர். இவர்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு பத்கம் என்ற பகுதியில், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பெட்டிகளில் வைக்கப்பட்டது. இன்று மதியம் அங்கு சென்ற மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஜம்மு காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக், ராணுவத்தின் வடக்கு கமாண்டர் லெப்டினண்ட் ஜெனரல் ரன்பீர் சிங் ஆகியோர் ராணுவ வீரர்கள் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

இதன் பிறகு ராணுவ வீரர்களின் உடல் அவர்களது குடும்பத்தாரிடம் ஒப்படைப்பதற்காக, வாகனங்களில் எடுத்துச் செல்லப்பட்டது. அப்போது, ராணுவ வீரர் உடல் வைக்கப்பட்டிருந்த பெட்டி ஒன்றை தனது தோள்மீது தூக்கி வைத்தபடி, ராணுவத்தினருடன் வாகனம் வரை நடந்து சென்றார் ராஜ்நாத் சிங். மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், ராணுவ வீரரின் உடலை தூக்கி சென்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...