முஸ்லிம் மாடு விற்பனையாளர் சுட்டுக் கொலை!

பிப்ரவரி 16, 2019 347

பாட்னா (16 பிப் 2019): பிகரில் முஸ்லிம் மாடு விற்பனையாளர் சுட்டுப் படுகொலை செய்யப் பட்டுள்ளார்.

முஹம்மது மும்தாஜ் என்ற மாடு விற்பனையாளர் மாடுகளை விற்பனை செய்துவிட்டு ரூ 5 லட்சத்துடன் வீடு திரும்பிக் கொண்டு இருந்தார். அவருடன் அவரது நண்பரும் இருந்தார். இந்நிலையில் அவர்களை மோட்டோர் சைக்கிளில் சூழ்ந்த கும்பல் ஒன்று முஹம்மது மும்தாஜிடம் இருந்த பணத்தைப் பறித்துக் கொண்டு முஹம்மது மும்தாஜை சுட்டுப் படுகொலை செய்துள்ளது.

மேலும் அவருடன் சென்ற நண்பர் எவ்வளவோ முயன்றும் முஹம்மது மும்தாஜை காப்பாற்ற முடியவில்லை. இந்த கொலை வழிப்பறிக்காக நடைபெற்றதாக போலீஸ் தெரிவித்துள்ளது. ஆனால் மாட்டுக்காக வட மாநிலங்களில் படுகொலைகள் தொடர்ந்த வண்ணமே உள்ளன.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...