புல்வாமா தாக்குலை தொடர்ந்து இந்தியா முழுவதும் கலவர அபாயம்!

பிப்ரவரி 17, 2019 384

புதுடெல்லி (17 பிப் 2019): காஷ்மீர் புல்வாமா பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து இந்தியா முழுவதும் கலவரம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீரில் உள்ள புல்வாமாவில் கடந்த வியாழக்கிழமை நடந்த மிக கொடுமையான தீவிரவாத தாக்குதலில் 40 சிஆர்பிஎப் படை வீரர்கள் கொலை செய்யப்பட்டனர். தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலத்தை சேர்ந்த வீரர்கள் இதில் பரிதாபமாக பலியானார்கள்.இந்த சம்பவம் காரணமாக காஷ்மீர் மட்டுமின்றி இந்தியா முழுக்க பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

இந்த தாக்குதலை தொடர்ந்து காஷ்மீரில் பல இஸ்லாமியர்களின் வீடுகள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. காஷ்மீரின் பல இடங்களில் இதனால் மிக மோசமான வன்முறை நடந்து வருகிறது. எப்போது வேண்டுமானாலும் மிகப்பெரிய கலவரம் ஏற்படலாம் என்ற நிலை நீடித்து வருகிறது.

இது மட்டுமின்றி டெல்லி, மும்பை, பீகார், உத்தர பிரதேசம் என்று பல இடங்களில் இதே போன்ற சூழ்நிலை நீடித்து வருகிறது. பல இடங்களில் காஷ்மீரை சேர்ந்த பணியாளர்களும், மாணவர்களும், மாணவிகளும் தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறார்கள். உடனே இவர்களை காஷ்மீரை நோக்கி செல்லும்படி போராட்டங்கள் நடந்து வருகிறன.

இந்த நிலையில் இப்படி தாக்குதலுக்கு உள்ளாகும் காஷ்மீரிகளுக்கு உதவ சிஆர்பிஎப் படை முன்வந்துள்ளது. இதுகுறித்து சிஆர்பிஎப் டிவிட்டர் பக்கம் செய்துள்ள டிவிட்டில் ''வெளிமாநிலங்களில் வசிக்கும் காஷ்மீர் மக்கள், மாணவர்கள் எங்களை எந்த நேரமும் 14411 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம், அல்லது 7082814411 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்பலாம். நீங்கள் துன்புறுத்தப்பட்டாலோ, தாக்கப்பட்டாலோ எங்களுக்கு தகவல் அளியுங்கள், உதவுகிறோம்'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...