பாகிஸ்தானை எதிர்க்க முஸ்லிம் வீரர்களை அதிகரிக்க வேண்டும் - முஃப்தி முஹம்மது இஸ்மாயில்!

பிப்ரவரி 17, 2019 497

மலேகான் (17 பிப் 2019): இந்தியாவுக்கு எதிராக இழப்புகளை அதிகரிக்கச் செய்யும் பாகிஸ்தானை எல்லையில் எதிர்க்க முஸ்லிம் ராணுவ வீரர்களை அதிகரிக்க அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று முஸ்லிம் மதகுருவும் அரசியல்வாதியுமான முஃப்தி முஹம்மது இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

மலேகானை சேர்ந்த முஃப்தி முஹம்மது இஸ்மாயில் இதுகுறித்து தெரிவிக்கையில், பாகிஸ்தான் தீவிரவாத செயல்களில் ஈடுபடுமெனில் அது இஸ்லாத்திற்கு முற்றிலும் எதிரானது. அவர்கள் செய்யும் அட்டூழியங்களுக்கு இஸ்லாம் பெயரை பயன்படுத்துவது ஏற்றுக் கொள்ள முடியாத குற்றம்.

நான் இந்திய அரசை கேட்டுக் கொள்கிறேன், "இந்திய ராணுவத்தில் அதிகமான முஸ்லிம்களை இணைக்க முயற்சி மேற்கொள்ளவும், இதற்காக மலேகானில் இருந்து 25000 முஸ்லிம் வீரர்களை நான் தர தயாராக இருக்கிறேன்" என்று தெரிவித்தார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...