10 ரூபாய்க்கு சேலை - விளம்பர மோகத்தில் சிக்கி பெண்கள் மயக்கம்!

பிப்ரவரி 17, 2019 505

ஐதராபாத் (17 பிப் 2019): பத்து ரூபாய்க்கு சேலை என்ற விளம்பரத்தை பார்த்து பெண்கள் கூட்டம் அலைமோதியதில் கூட்ட நெரிசலில் சிக்கி 10 பெண்கள் மயங்கி விழுந்துள்ளனர்.

தெலங்கானா மாநிலம், ஹைதராபாத் அருகேயுள்ள சித்திபேட்டையில் இயங்கிவரும் ஜவுளிக்கடையில் 10 ரூபாய்க்கு புடவை வழங்கப்படும் என்று விளம்பரம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிகாலை முதலே அந்த ஜவுளிக்கடைக்கு பெண்கள் படையெடுக்க துவங்கியுள்ளனர். கூட்டம் அதிகரித்ததால், கடை நிர்வாகம் கடையின் ஷட்டரை மூடியது. இதனால் நூற்றுக்கணக்கான பெண்கள் ஒரே நேரத்தில் கடையின் ஷட்டரை உடைத்துக்கொண்டு உள்ளே போக முயற்சி செய்ததால் அங்கு கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

கூட்டத்தில் சிக்கிய 10க்கும் மேற்பட்ட பெண்கள் காயம் அடைந்தனர். மேலும் ஒரு பெண் வைத்திருந்த ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் மற்றொருவர் அணிந்திருந்த தங்க சங்கிலி ஆகியவை கூட்டத்தில் காணாமல் போனதால் அங்கு பெரும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...