புல்வாமாவில் மேலும் நான்கு வீரர்கள் பலி!

பிப்ரவரி 18, 2019 425

ஸ்ரீநகர் (18 பிப் 2019): காஷ்மீர் புல்வாமாவில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் நான்கு வீரர்கள் பலியாகியுள்ளனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த வாரம் வியாழக்கிழமை பயங்கரவாதிகள் நடத்திய, தற்கொலைத் தாக்குதலில் 44 துணை ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கூறி வருகின்றனர்.

எல்லை தாண்டிய பயங்கரவாத தாக்குதலை முறியடிக்க ராணுவம் பதிலடி கொடுக்கும் என அரசும் கூறியுள்ளது. இதையடுத்து ஜம்மு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத சக்திகளை வேட்டையாடும் பணியில் ராணுவம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில், புல்வாமா மாவட்டத்தின் பிங்லன் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்று காலை அங்கு விரைந்த பாதுகாப்பு படையினர், பயங்கரவாதிகளை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தினர். அப்போது பயங்கரவாதிகளும் பதில் தாக்குதல் நடத்தினர். இந்த சண்டையில் ராணுவ மேஜர் உள்ளிட்ட 4 வீரர்கள் உயிரிழந்தனர். ஒருவர் காயமடைந்துள்ளார். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...