காங்கிரஸ் பிரமுகர்கள் இருவர் மர்ம நபர்களால் படுகொலை!

பிப்ரவரி 18, 2019 368

திருவனந்தபுரம் (18 பிப் 2019): கேரளாவில் காங்கிரஸ் பிரமுகர்கள் இருவர் படுகொலை செய்யப்பட்டுள்ள நிலையில் அங்கு பெரும் பரபரப்பு நிலவுகிறது.

கேரளாவில் காசர்கோடு மாவட்டத்தில் நேற்று இரவில் காங்கிரஸ் பிரமுகர்கள் இருவர் கொல்லப்பட்டனர். இந்தக் கொலைக்கு கம்யூனிஸ்ட் கட்சியினர்தான் காரணம் என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியது. இந்நிலையில் இன்று முழு அடைப்புக்கு உத்தரவிட்டுள்ளனர். அதன் காரணமாக தமிழக கேரளா எல்லையான களியக்காவிலிருந்து பேருந்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

மேலும் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் இருக்க போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

இருப்பினும் காசர்கோடு உள்ளிட்ட மாவட்டங்களில் காங்கிஸ் தொண்டர்கள் சிலர் கற்களை எறிந்து வன்முறையில் ஈடுபட்டனர். இதனால் பொதுமக்கள் பீதிக்கு ஆளாகினர். முழு அடைப்பு காரணமாக கல்லூரி மாணவர்கள், உள்பட மக்கள் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...