காங்கிரஸ் இளைஞர்கள் படுகொலையில் திடீர் திருப்பம்!

பிப்ரவரி 20, 2019 494

திருவனந்தபுரம் (20 பிப் 2019): கேரளா காங்கிரஸ் இளைஞர்கள் இருவர் படுகொலை செய்யப் பட்டது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கேரள மாநிலம், இளைஞர் காங்கிரஸ் கட்சியின் கிரிபேஷ் (24) மற்றும் சரத் லால் (29) ஆகிய இருவரும் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளனர். அடையாளம் தெரியாத அந்த நபர்கள் காரில் சென்று இந்த தாக்குதல் சம்பவத்தை நடத்தியுள்ளனர்.

இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் கொலை தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். இதனிடையே இருவர் கொலைக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குண்டர்கள் தான் காரணம் என இளைஞர் காங்கிரஸ் குற்றம்சாட்டியிருந்தது.

இதனை அடுத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த பீதாம்பரம் என்பவரை கேரள காவல்துறை கைது செய்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...