பாஜக சார்பில் 20 முஸ்லிம் வேட்பாளர்கள் – சூடுபிடிக்கும் உ.பி தேர்தல் களம்!

467

லக்னோ (11 ஜன 2022): உத்தரப் பிரதேசத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் குறைந்தபட்சம் 20 முஸ்லிம் வேட்பாளர்களையாவது நிறுத்த வேண்டும் என்று பாஜக மத்திய தலைமையிடம் சிறுபான்மை மோர்ச்சா கேட்டுக் கொண்டுள்ளது.

2017 தேர்தலில் அக்கட்சி ஒரு முஸ்லிம் வேட்பாளரையும் நிறுத்தவில்லை. “முஸ்லீம் மக்கள்தொகை அதிகம் இருக்கும் பல தொகுதிகள் உள்ளன. பல இடங்களில் நாங்கள் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளோம். சம்பல், மொராதாபாத் மற்றும் மீரட் போன்ற தொகுதிகளில், முஸ்லிம் வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர்,” என்று சிறுபான்மை மோர்ச்சா தலைவர் ஜமால் சித்திக் கூறியுள்ளார்.

இதைப் படிச்சீங்களா?:  பிரதமர் தமிழக வருகையில் பாதுகாப்பு குறைபாடு - அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு டிஜிபி பதில்!

“மேற்கு வங்கத்திலும் கட்சிக்கு முஸ்லீம் வேட்பாளர்கள் உள்ளனர். அதேபோல இந்த முறை உத்தரபிரதேசத்திற்கு சில பெயர்களை நாங்கள் முன்மொழிகிறோம். எங்களுக்கு முஸ்லிம் சமூகத்தின் அதிக பிரதிநிதித்துவம் தேவை. இது அவர்கள் சமூகத்தில் முன்னேற உதவும்.” – என்றும் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

30 சதவீதத்திற்கும் அதிகமான முஸ்லீம் மக்கள்தொகை கொண்ட 100 இடங்களும், 20 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட 140 இடங்களும், 60-70 சதவீத முஸ்லிம் மக்கள்தொகை கொண்ட 40 இடங்களும் உபியில் உள்ளதாக ஜமால் சித்திக் கூறியுள்ளார். .