மத்திய மாநில அரசுகளை மிரள வைத்த விவசாயிகள் - 180 கிலோ மீட்டர் தூர பேரணி!

பிப்ரவரி 22, 2019 367

நாசிக் (22 பிப் 2019): மகாராஷ்டிராவில் விவசாயிகள் மத்திய மாநில அரசுகளை எதிர்த்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

50 ஆயிரத்திற்கும் அதிகமான விவசாயிகள் நாசிக்கிலிருந்து மும்பையை நோக்கி மத்திய மாநில அரசுகளை எதிர்த்து மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணியில் ஈடுபட்டனர். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 23 மாவட்ட விவசாயிகள் 180 கிலோ மீட்டர் தூரத்தில் இந்த பேரணியை நடத்தியுள்ளனர்.

கடந்த வருடம் இதே பேரணியை நடத்திய விவசாயிகள் உலகை திரும்பிப் பார்க்க வைத்தனர். அரசு விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதி அளித்ததை அடுத்து பேரணி கைவிடப் பட்டது. ஆனால் அரசு எந்த கோரிக்கைகளையும் நிறைவேற்றாததை அடுத்து விவசாயிகள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...