இந்தியாவிலிருந்து ஹஜ் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு!

பிப்ரவரி 23, 2019 364

புதுடெல்லி (23 பிப் 2019): இந்தியாவிலிருந்து ஹஜ் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை மேலும் 25 ஆயிரம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

சமீபத்தில் இந்தியா வந்த சவூதி பட்டத்து இளவரசர் முஹம்மது பின் சல்மானிடம் இந்திய பிரதமர் மோடி இந்திய ஹஜ் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க கோரிக்கை வைத்திருந்தார். அதன்படி சென்ற வருடத்தைக் காட்டிலும் 25 ஆயிரம் ஹஜ் யாத்ரீகர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

ஏற்கனவே கடந்த டிசம்பரில் இந்தியாவுக்கும் சவூதிக்கும் இடையே ஹஜ் ஒப்பநதம் கையெழுத்தானது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...