இந்தியர்கள் பாகிஸ்தான் மொழியில் பேசக் கூடாது - மோடி கண்டனம்!

பிப்ரவரி 24, 2019 370

ஜெய்ப்பூர் (24 பிப் 2019): இந்தியாவில் வாழும் சிலர் பாகிஸ்தானின் மொழியில் பேசுவதற்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் டோங்க் தொகுதியில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

‘‘தீவிரவாதத்துக்கு எதிராக நாம் போரிட்டு வருகிறோம். மனிதநேயத்துக்கு எதிரானவர்களுடன் தான் நமது போராட்டம். காஷ்மீருக்காக தான் போராடுகிறோம். காஷ்மீருக்கு எதிராக அல்ல. காஷ்மீர் மக்களுக்கு எதிராக அல்ல.

காஷ்மீர் இளைஞர்களுக்கு எதிராக சமீபகாலமாக நடந்து வரும் சம்பவங்கள், சிறிதோ, பெரிதோ ஆனால் அதனை ஏற்க முடியாது. இதுபோன்ற சம்பவங்கள் நடக்க கூடாது. காஷ்மீர் இளைஞர்கள் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள்.

பாகிஸ்தானுக்கு சென்று வந்த இவர்கள் எதையும் செய்யவில்லை, மோடியை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்கிறார்கள். மும்பையில் தாக்குதல் நடத்தியவர்களை பற்றி இவர்கள் எந்த விமர்சனத்தையும் வைப்பதில்லை’’ எனக் கூறினார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...