வாட்ஸ் அப்பில் தவறான தகவல் பரப்புபவர்கள் மீது நடவடிக்கை!

பிப்ரவரி 24, 2019 419

புதுடெல்லி (24 பிப் 2019): வாட்ஸ் அப்பில் தவறான தகவல்களை பரப்புபவர்கள் குறித்து புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய தொலை தொடர்பு துறை தெரிவித்துள்ளது.

சமூக வலைதளமான வாட்ஸ் அப்பில் அவதூறான தகவல்கள் பரப்பப்படுவதை தடுக்க மத்திய தொலை தொடர்பு துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

வாட்ஸ் அப்பில் யாராவது ஆபாசமாகவோ, சட்டத்துக்கு புறம்பான கருத்துக்களை அனுப்பினாலோ, கொலை மிரட்டல் விடுத்தாலோ அவைகளை ’’ஸ்கிரீன்ஷாட்” எடுத்து புகார் அளித்தால் சம்மந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல் தொடர்புதுறை அறிவித்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...