பாகிஸ்தான் மீது போர் தொடுத்தால் பாஜக தோல்வியை சந்திக்கும் - பரூக் அப்துல்லா!

பிப்ரவரி 24, 2019 391

ஜம்மு (24 பிப் 2019): பாகிஸ்தான் மீது இந்தியா போர் தொடுத்தால் வரும் தேர்தலில் பாஜக தோல்வியை சந்திக்கும் என்று முன்னாள் காஷ்மீர் முதல்வர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், "பாகிஸ்தான் மீது போர் தொடுப்பதே பாஜகவுக்கு வெற்றி தேடித்தரும் என பாஜக விரும்புகிறது. ஆனால் அது தவறான கணக்காகும். அது பாஜகவுக்கு தோல்வியில் போய் முடியும்.

இதுவரை நான்கு முறை பாகிஸ்தானுடன் போர் தொடுக்கப் பட்டு விட்டது. ஆனால் இதுவரை முடிவு எட்டப்படவில்லை. எந்த விசயத்துக்கும் போர் முடிவாகாது. இதனை வேறு வகையிலேயே பேசி தீர்க்க வேண்டும்.

இந்தியாவில் பல்வேறு மதத்தினர் உள்ளனர். அவர்களை பிரித்து ஆளும் வகையில் பாஜக முயல்கிறது. இது இந்தியாவில் ஒருபோதும் நடக்காது என்றும் அவர் தெரிவித்தார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...