ஓட்டுக்காக விவசாயிகளுக்கு அரசுப் பணத்தில் மோடி வழங்கும் லஞ்சம்: ப.சிதம்பரம் விளாசல்!

பிப்ரவரி 24, 2019 330

சென்னை (24 பிப் 2019): நிதியுதவி என்ற பெயரில் பிரதமர் மோடி அரசுப் பணத்தில் விவசாயிகளுக்கு ஓட்டுக்காக லஞ்சம் வழங்குகிறார் என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

இந்தியா முழுவதும் உள்ள 12 கோடி விவசாயிகளுக்கு 25 ஆயிரம் கோடி ரூபாய் நிதி உதவி அளிக்கும் திட்டத்தை இன்று(ஞாயிற்றுக்கிழமை) பிரதமர் துவங்கி வைக்கிறார். முதல் தவணையாக ஒவ்வொரு விவசாயிகளின் வங்கி கணக்கிலும் 2 ஆயிரம் ரூபாய் செலுத்தப்பட உள்ளது. ஆண்டுக்கு 3 தவணைகளாக 6 ஆயிரம் ரூபாய் விவசாயிகளின் கணக்கில் செலுத்தப்படும். இத்திட்டத்தின் மூலம் 50 லட்சம் விவசாயிகள் பயனடைவார்கள் என்று கூறப்படுகிறது.

இதுக்குறித்து கருத்து தெரிவித்த முன்னால் நிதியமைச்சர் பா.சிதம்பரம், தனது ட்விட்டர் பக்கத்தில், இன்று இந்திய ஜனநாயகத்திற்கு கறுப்பு நாள். அரசுப் பணத்தை எடுத்து ஓட்டுக்கு லஞ்சம் கொடுக்கும் திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடக்கி வைக்கிறார். மோடி அரசு விவசாயத்தை ஐந்து ஆண்டுகள் சீரழித்து விட்டு இன்று ஒவ்வொரு விவசாயக் குடும்பத்திற்கும் ரூ 2000 தரப்போகிறார்கள். இது ஓட்டுக்கு லஞ்சம் என்பதைத் தவிர வேறு என்ன? ஐந்து பேர் கொண்ட ஒரு விவசாயக் குடும்பத்திற்கு நாள் ஒன்றுக்கு ரூ 17. இது உதவித்தொகையா, பிச்சையா, லஞ்சமா? எனக் கடுமையாக விமர்சித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...