முஸ்லிம் இளைஞர் போலீசாரால் சுட்டுக் கொலை!

பிப்ரவரி 24, 2019 587

மிவாத் (24 பிப் 2019): அரியானாவில் 26 வயது இளைஞர் போலீசாரால் என்கவுண்டர் முறையில் சுட்டுப் படுகொலை செய்யப் பட்டுள்ளார்.

அரியானாவில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் மிவாத் மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் அர்ஷத் என்ற 26 வயது இளைஞர் மற்றும் அவரது நண்பர்கள் இக்ராம் (41) முஷ்தாக் (30) இன்னும் சிலர் அமர்ந்திருந்து பேசிக் கொண்டிருந்தபோது அங்கு வந்த போலீசார் திடீரென அவர்கள் அனைவரையும் துரத்திப் பிடித்துள்ளனர்.

அப்போது நடத்தப் பட்ட துப்பாக்கிச் சூட்டில் அர்ஷத் கொல்லப் பட்டுள்ளார். மற்றவர்கள் படுகயம் அடைந்துள்ளனர். ஆனால் இந்த என்கவுண்டர் எதற்காக நடத்தப் பட்டது என்பது குறித்து விவரம் இல்லை.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...