அபிநந்தன் குறித்த அனைத்து வீடியோக்களையும் நீக்க யூடூபுக்கு மத்திய அரசு உத்தரவு!

மார்ச் 01, 2019 516

புதுடெல்லி (01 மார்ச் 2019): இந்திய போர் விமான விமானி அபிநந்தனின் வீடியோக்கள் அனைத்தையும் நீக்கம் செய்யுமாறு யூடூபுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

பாகிஸ்தான் பிடியில் உள்ள அபிநந்தன் குறித்து 11 வீடியோக்கள் யூடூப் மற்றும் சமூக வலைதளங்களில் உள்ளது. இதனை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்நிலையில் மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் சார்பில், அபிநந்தன் வீடியோவை நீக்கவேண்டும் என்று கூறி யூடியூப்புக்குக் கட்டளையிட்டது. இதுதொடர்பாக யூடியூப் செய்திதொடர்பாளர் கூறுகையில்,சம்பந்தபட்ட அதிகாரிகளிடமிருந்து வந்த கோரிக்கை மற்றும் எங்களின் கொள்கைகளின் அடிப்படையில் நாங்கள் அந்த வீடியோவை நீக்க உள்ளோம்” என்றார்.தற்போது மத்திய அரசு உத்தரவுப்படி இந்திய விமானப்படை வீரர் அபினந்தன் தொடர்பான வீடியோக்களை யூ டியூப் நிறுவனம் நீக்கியதாக தெரிவித்துள்ளது. அபிநந்தனை இன்று பாகிஸ்தான் விடுவிக்கவுள்ள நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.

முன்னதாக அபிநந்தன் வீடியோவில் நான் நன்றாக இருக்கிறேன் என்றும் பாகிஸ்தான் ராணுவம் அவரை நல்லவிதமாக நடத்துவது குறித்தும் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...