அபிநந்தன் வருகை - சானியா மிர்சா, ஷாரூக் கான் கருத்து!

மார்ச் 02, 2019 430

மும்பை (02 மார்ச் 2019): விங் கமாண்டர் அபிநந்தன் நாடு திரும்பிய மகிழ்ச்சி வெள்ளத்தில் நாடே உள்ள நிலையில் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸாவும், நடிகர் ஷாருக்கானும் தங்களது கருத்துக்களை பகிர்ந்துள்ளனர்.

இதுகுறித்து சானியா மிர்சா கூறுகையில், "அபிநந்தன் நீங்கள் எங்கள் ஹீரோ, மீண்டும் தாய் நாடு வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. உங்களுக்கு நாடே சல்யூட் அடிக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.

அதேபோல நடிகர் ஷாருக்கான் "அபிநந்தன் நாடு திரும்பியது மிக்க மகிழ்ச்சி, தாய் வீட்டை அடைவது என்பது ஒரு தனி மகிழ்ச்சி. அபி நந்தனின் மகிழ்ச்சியில் நானும் பங்கு கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...