பிளஸ் டூ தேர்வு எழுதிய மாணவர் மாரடைப்பால் மரணம்!

மார்ச் 02, 2019 291

ஐதராபாத் (02 மார்ச் 2019): தெலுங்கானா மாநிலத்தில் +2தேர்வு எழுதிய மாணவர் மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார்.

தெலங்கானா மாநிலத்தில் தற்போது 11 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகள் நடந்து வருகின்றன. இதனை 9.63 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்.

இந்நிலையில் செகந்திரபாத்தில் உள்ள ஸ்ரீசைத்தன்யா கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்தில், கோபி ராஜு (16 வயது) என்ற மாணவருக்கு திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரை, அவசரம் அவசரமாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இருப்பினும் செல்லும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்தது.

மாணவர் ஒருவர் மாரடைப்பால் மரணம் அடைந்த சம்பவம் தெலுங்கானா மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...