நேற்று பிறந்த ஆண் குழந்தைக்கு அபிநந்தன் என பெயர் சூட்டி மகிழ்ந்த தம்பதியினர்!

மார்ச் 02, 2019 338

ஜெய்ப்பூர் (02 மார்ச் 2019): ராஜஸ்தானில் நேற்று பிறந்த ஆண் குழந்தைக்கு, குழந்தையின் பெற்றோர் அபிநந்தன் என பெயரிட்டு மகிழ்ந்துள்ளனர்.

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலில் இந்திய போர் விமானி அபிநந்தன் பாகிஸ்தானில் சிக்கிக்கொண்டார். பின்னர் அவர் நேற்று விடுவிக்கப்பட்டு இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார். சென்னையைச் சேர்ந்த அபிநந்தனின் வீரம் மற்றும் துணிச்சலுக்கு நாடு முழுவதும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டத்தில் நேற்று மாலை சுவப்னா தேவி என்ற பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு அபிநந்தனின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த செயல் மிகுந்த மகிழ்ச்சி அடைந்திருப்பதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...