14 வயது சிறுமி கடத்தி வன்புணர்வு - ஆட்டோ ஓட்டுநர்கள் அட்டூழியம்!

மார்ச் 05, 2019 381

ஐதராபாத் (05 மார்ச் 2019): தெலுங்கானா மாநிலத்தில் 14 வயது சிறுமி ஆட்டோ ஓட்டுநர்களால் கடத்தி வன்புணர்வு செய்யப் பட்டுள்ளார்.

ஐதராபாத் சீனிவாச நகர் தனியார் மருத்துவமனை வெளியில் ஞாயிறன்று தனியாக நின்று கொண்டிருந்த சிறுமியை ஆட்டோ ஓட்டுநர்கள் இருவர் ஆட்டோவில் கடத்திச் சென்று வன்புணர்வு செய்துள்ளனர். பின்பு அந்த சிறுமியை அதே மருத்துவ மனை வாசலில் கொண்டு விட்டுவிட்டு தப்பியோடிவிட்டனர்.

சிறுமி பெற்றோரிடம் இதுகுறித்து கூறியதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் ஆட்டோ ஓட்டுநர்கள் இருவரையும் தேடி வருகின்றனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...