மாவோயிஸ்ட் அதிரடிப்படையினர் மோதல் - ஒரு மாவோயிஸ்ட் சுட்டுக் கொலை!

மார்ச் 07, 2019 306

வயநாடு (07 மார்ச் 2019): கேரளாவில் மாவோயிஸ்டுகளுக்கும், அதிரடிப் படையினருக்கும் இடையே நடந்த மோதலில் ஒரு மாவோயிஸ்ட் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் வைத்திரி காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ஒரு தனியார் ரிசார்ட்டில் நேற்று இரவு மாவோயிஸ்டுகள் புகுந்துள்ளனர். அங்கிருந்தவர்களை சிறைப்பிடித்து பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். இதுபற்றி காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து அங்கு விரைந்த மாநில அதிரடிப்படை போலீசார், மாவோயிஸ்டுகள் இருந்த ரிசார்ட்டை சுற்றி வளைத்து மாவோயிஸ்டுகளை நோக்கி துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். மாவோயிஸ்டுகளும் துப்பாக்கி சூடு நடத்தினர்.

சில மணி நேரம் நீடித்த இந்த சண்டையில் ஒரு மாவோயிஸ்ட் கொல்லப்பட்டான். காயமடைந்த மற்றொரு மாவோயிஸ்ட் அங்கிருந்து காட்டிற்குள் தப்பிச் சென்றுவிட்டதாக தெரிகிறது. அவனை அதிரடிப்படையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...