உத்திர பிரதேசத்தில் காஷ்மீர் பழ வியாபாரிகள் மீது கொடூர தாக்குதல்!

மார்ச் 07, 2019 499

லக்னோ (07 மார்ச் 2019): உத்திர பிரதேசம் லக்னோவில் காஷ்மீர் பழ வியாபாரிகள் இருவர் மீது வலதுசாரி அமைப்பினர் கொடூர தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.

நேற்று மாலை நடந்த இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான வீடியோவை அந்த அமைப்பை சேர்ந்த ஒருவர் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், காவி உடை அணிந்த 2 பேர், சாலையின் ஓரமாக அமர்ந்திருந்த 2 காஷ்மீரி பழ விற்பனையாளர்களை கட்டையால் கடுமையாக தாக்குகின்றனர். மற்றொரு வீடியோவில் அடி வாங்கும் நபர் தனது தலையில் கையை வைத்து தடுத்து தாக்குதல் காரர்களிடம் அடிப்பதை நிறுத்தமாறு கெஞ்சுகிறார்.

இன்னொரு வீடியோவில், காவி உடை அணிந்த அந்த நபர், 2வது பழ வியாபாரியிடம் தனது அடையாள அட்டையை காட்டும் படி கூறுகிறார். இதைத்தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து செல்கின்றனர்.

இதனிடையே உள்ளூர் நபர்கள் அந்த வலதுசாரிகள் தாக்குவதை தடுத்து நிறுத்தி அறிவுரை கூறுகின்றனர். சட்டத்தை உங்கள் கையில் எடுக்காதீர்கள் எதுவாக இருந்தாலும் போலீஸை அழையுங்கள் என்று அவர்கள் வலதுசாரிகளுக்கு கூறினர்.

பல வருடங்களாக அந்த பகுதயில் உலர்ந்த பழங்களை விற்பனை செய்துவருகின்றனர் அந்த 2 காஷ்மீரிகள். இந்த தாக்குதலுக்கு எதிர் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

புல்வாமா தாக்குதலை தொடர்ந்து நாடெங்கும் காஷ்மீரிகள் மீது தொடர் தாக்குதல்கள் நடத்தப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...