காங்கிரஸ் கட்சியின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

மார்ச் 07, 2019 441

புதுடெல்லி (07 மார்ச் 2019): நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ள சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி இன்று அறிவித்துள்ளது.

தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் 15 பேர் கொண்ட முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை இன்று அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக, காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் 11 பேரு ம், குஜராத் மாநிலத்தில் 4 பேரும் அடங்குவர். காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி உபியின் ரேபரேலி தொகுதியிலும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அமேதி தொகுதியிலும் மீண்டும் போட்டியிடுகின்றனர் என தெரிவித்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...